Wednesday, August 28, 2013
இலங்கை::சீனாவும் ரஷ்யாவும் இலங்கையின் நட்பு நாடுகள் என்பதால் இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக்கு எதிராக சாட்சியங்க
ளை திரட்டுவதற்காகவே நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்துள்ளார்.
நவநீதம்பிள்ளை ஒப்பந்தங்களை நிறைவேற்றும் நபர். அரசாங்கம் ஒற்றை காலில் நின்று கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறது. ஆனால் அந்த ஒற்றை காலையும் உடைத்து விட ஐக்கிய தேசியக்கட்சியும்
ஜே.வி.பியும் முயற்சித்து வருகின்றன என்றார்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர,
சர்வததேச பிரிவினைவாத சக்திகளின் அடிப்படை நோக்கம் அவர்களின் ஈழம் என்ற திட்டத்தில் இலங்கையை சிக்க வைப்பதாகும். நாட்டின் தலைவரையும், முப்படையினரையும் போர்க்குற்றம் என்ற தூண்டிலில் சிக்க வைப்பதே சர்வதேச பிரிவினைவாத சக்திகளின் நோக்கம் எனக் கூறினார்.

No comments:
Post a Comment