Wednesday, August 28, 2013
இலங்கை::இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் ஆன்மீக சக்தியை பயன்படுத்தி படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கியதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நோக்கம் நிறைவேறுவதை தடுக்க இந்த சக்தியை பயன்படுத்த போவதாகவும் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

நவநீதம்பிள்ளை மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படுவதோடு புலம்பெயர் தமிழர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் பெண்மணி என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நவநீதம்பிள்ளை என்பவர் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர். இதனை இலங்கை மக்கள் அறிந்திருக்க வேண்டியது முக்கியமானது.
மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்புகிறோம்.
இலங்கையில் போர் நடைபெறவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது. நாட்டுக்கு எதிரானவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டுச் செல்லவே நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளார் என்றார்.

No comments:
Post a Comment