Wednesday, August 28, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் எதனையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை: நிமால் சிறிபால டி சில்வா!

Wednesday, August 28, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் எதனையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
நவனீதம்பிள்ளைக்கு தேவையான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விஜயம் நவனீதம்பிள்ளைக்கு உண்மை நிலைமைகளை விளங்கிக்கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசாங்கத்திற்கு எதிராக சில தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதிலும் அரசாங்கம் அதனைக் கண்டு அஞ்சாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
கள நிலைமைகளை நேரில் கண்டறிந்து அது தொடர்பான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சந்தர்ப்பம் நவனீதம்பிள்ளைக்கு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
நவனீதம்பிள்ளை பக்கச்சார்பற்ற நடுநிலையான அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment