Wednesday, August 28, 2013
சட்டமீறல்கள் குறித்து 175 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய சம்பவங்கள் குறித்து 13 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான தேர்தல் சட்டமீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை 42 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இதுவரை 36 பேர் கைது!
தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இதுவரை 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 68 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் 25 முறைப்பாடுகளும், வட மேல் மாகாணத்தில் 11 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை மத்திய மாகாணத்தில் 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை:தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
சட்டமீறல்கள் குறித்து 175 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய சம்பவங்கள் குறித்து 13 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான தேர்தல் சட்டமீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை 42 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இதுவரை 36 பேர் கைது!
தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இதுவரை 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 68 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் 25 முறைப்பாடுகளும், வட மேல் மாகாணத்தில் 11 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை மத்திய மாகாணத்தில் 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment