Sunday, August 25, 2013

இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தும் கும்பலின் புது "டெக்னிக்' : போலீசார் திணறல்!

Sunday, August 25, 2013
ராமநாதபுரம்::தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தும் கும்பல், போலீசாரை திசைதிருப்பும் புதிய "டெக்னிக்கு' களை கையாண்டு, தப்பி விடுகின்றனர். இதனால், கடத்தலை தடுக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
 
கடந்த சில மாதங்களாக, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி வழியாக, இலங்கைக்கு கடத்தல் ஜரூராக நடந்து வருகிறது. கஞ்சா, ஹெராயின் உட்பட போதை பொருள் கடத்தும் கும்பல், போலீசாரை திசை திருப்ப, குறிப்பிட்ட வழித்தடத்தில் கட
த்தல் பொருள் வருவதாக, "கியூ' பிரிவு உள்ளிட்ட போலீசாருக்கு தகவல் தருகின்றனர்.
அதன்படி, சோதனை நடத்தும் போலீசாரிடம் பிடிபடும் நபர்களிடம் குறைந்த அளவிலான கடத்தல் பொருட்களே சிக்குகிறது. அதிக அளவிலான கடத்தல் பொருட்கள், வேறு வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு விடுகிறது.
 
இதேபோல், ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளை படகில் ஏற்றி செல்லும் ஏஜன்ட்கள் உணவு, படகுகளுக்கு எரிபொருள், குடிநீர் போன்ற பொருட்களை, ராமநாதபுரம் மாவட்ட துணை ஏஜன்ட்கள் மூலம் தீவு அருகே வரவழைத்து, பெற்று செல்கின்றனர். இவர்களை பிடிப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
போதிய "இன்பார்மர்'கள் இல்லாததால், கடத்தலை முற்றிலும் தடுக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.

No comments:

Post a Comment