Tuesday, August 13, 2013

டெக்ஸி சாரதியாக மாறிய நோர்வே பிரதமர்!!

Tuesday, August 13, 2013
நோர்­வே::மக்­களின் மன நிலையை அறிந்து கொள்­வ­தற்கு நோர்­வே பிர­தமர் ஒரு நாள் மாத்­திரம் டெக்ஸி சார­தி­யாக மாறி­யி­ருக்­கின்றார்.

நோர்­வேயில்  வரும் செப்­டெம்பர் மாதம்  நாடா­ளு­மன்­றத்­துக்­கான தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த தேர்­தலில் தற்­போ­தைய  நோர்வே பிர­த­மரின் செல்­வாக்கு சரி­யக்­கூடும் என கருத்து கணிப்­புகள் கூறு­கின்­றன.

இந்­நி­லையில், மக்­களின் மன நிலையை நேரில் கள ஆய்வு செய்து தெரிந்­துக்­கொள்ள பிர­தமர் ஜென்ஸ் ஸ்டோல்­ டென்பர்க் முடிவு செய்தார். விளம்­பர நிறு­வனம் ஒன்றும் அவ­ரது முடி­வுக்கு துணை நின்­றது.

இத­னை­ய­டுத்து, தலை­நகர் ஒஸ்­லோவில் ஒரு பகல் முழு­வ­திலும் அவர் டெக்ஸி  சார­தி­யாக இருந்­துள்ளார். சரா­சரி டெக்ஸி சார­தி­யாக  சீருடை அணிந்து அவர் பய­ணி­களை ஏற்றிச் சென்­றாலும், நாடு முழு­வதும் பிர­ப­ல­மான பிர­த­மரின் முகத்தை கண்­ணாடி வழி­யாக பார்த்த சிலர் அவரை அடையாளம் கண்­டு­பி­டித்து விட்­டனர். ஒரு சிலர் மட்டும் டெக்ஸியை விட்டு இறங்­கி­னோமா மீற்றர் கட்­ட­ணத்­தை கொடுத்தோமா என்று சென்­றுள்­ளனர்.

சாரதி  இருக்­கைக்கு முன்­புறம் அமைக்­கப்­பட்­டி­ருந்த வீடியோ கமேரா மூலம் இந்த காட்­சிகள் அனைத்தும் பதிவு செய்­யப்­பட்டு பிர­தமர் ஜென்ஸ் ஸ்டோல் டென்பெர்க்கின் 'பேஸ் புக்' பக்­கத்தில் பதி­வேற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

இதனை தேர்தல் பிர­சா­ரத்­திற்கு பயன்­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இந்த அனு­பவம் பற்றி கூறிய ஜென்ஸ் ஸ்டோல்­டென்பர்க் 'ஒஸ்லோ நகரம் முழு­வதும் நான் பிர­ப­ல­மா­னவன். காரின் பின் சீட்டில் நான் அமர்ந்து செல்­வதை தான் மக்கள் பார்த்­துள்­ளனர். 8 ஆண்­டு­க­ளுக்கு பிறகு நானே காரை ஓட்டிச் சென்­றமை புதிய அனு­பவம் போல் இருந்­தது.

பல பிரச்­சி­னைகள் தொடர்­பாக மக்கள் தங்­களின் எண்­ணங்­களை வெளிப்­ப­டை­யாகத் தெரி­விக்கும் இடம் ஒன்று உண்டு என்றால், அது டெக்ஸி பய­ணத்தின் போதுதான் என்று கூறலாம். மக்கள் உண்­மை­யி­லேயே என்ன நினைக்­கி­றார்கள் என்­பதை தெரிந்­துகொள்­வ­தற்­காகத் தான் இந்த முடிவை தேர்வு செய்தேன்' என்றார்.

டெக்­ஸியில் பய­ணியை ஏற்றிச் சென்­ற­ ஒரு தரு­ணத்தில் 'கிளட்ச்' என்று நினைத்து அவர் 'பிரேக்'கை அழுத்­தி­விட டெக்ஸி நிலை தடு­மா­றிய சுவா­ரஸ்ய சம்­ப­வமும் இந்த பய­ணத்தில் உண்டு.

தேர்­தலில் தோற்று விட்டால் முழு நேர டெக்ஸி சார­தி­யாக  ஆகும் உத்­தேசம் உள்­ளதா என நிரு­பர்கள் பிர­த­ம­ரிடம் கேட்­ட­தற்கு, 'இந்த நாட்­டுக்கும், டெக்ஸி பய­ணி­க­ளுக்கும் ஒரு டெக்ஸி  சார­தி­யாக  இருப்பதைவிட, நாட்டின் பிரதமர் என்ற முறையில் சிறந்த சேவையாற்ற முடியும் என நான் நம்புகிறேன்' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்துள்­ளார்.

No comments:

Post a Comment