Wednesday, August 14, 2013

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தியா பயணம்!

Wednesday, August 14, 2013
இலங்கை::வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தியா செல்ல விருப்பதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்தது.
 
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அங்கு ஒருநாள் மாத்திரமே தங்கியிரு ப்பாரெனவும் தெரிய வருகிறது.
 
இந்த விஜயத்தின் போது அமைச்சர் பீரிஸ் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்து ஆராய்வாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment