Wednesday, August 14, 2013
இலங்கை::புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த உயர் ஸ்தானிகர்களும் பெனின் குடியரசின் தூதுவர் ஒருவரும் நேற்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமது நியமனப் பத்திரங்களை கையளித்தனர்.
இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ,தில் கலந்துகொண்டனர்.
தான்சானியா ஐக்கிய குடியரசு உயர் ஸ்தானிகர் ஜோன் டபிள்யூ.எச். கிஜாசி- போட்ஸ்வானா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி லெசகோ எத்தல் மொட்சுமி - ஸ்வாசிலாந்து பேரரசின் உயர் ஸ்தானிகர் திருமதி செனீல் அஞ்சலீன் மெக்லுயி- ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் எர்னஸ்ட் ரவமசியோ-மொரிஷியஸ் குடியரசின் உயர் ஸ்தானிகர் அரீகுமார் ஜெகசூ பெனின் குடியரசு தூதர் திரு ஆண்ட்ரே சன்ரா ஆகியோர் தமது நியமனப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

No comments:
Post a Comment