Wednesday, August 14, 2013
இதில், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.விமானப் படைக்காக, 38,900 கோடி ரூபாய் மதிப்பிலான, ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. கப்பற் படை, கடந்த மூன்றுநிதியாண்டுகளில், பாதுகாப்புசாதனங்களின் இறக்குமதிக்காக, 4,000 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது.இத்தொகை, பி-18 விமானம் தாங்கி நீர்மூழ்கி கப்பலுக்காக, ஹர்பூன் ஏவுகணைகள் வாங்கவும், ரஷ்யாவில், நீர்மூழ்கி கப்பல்களின் புதுப்பிப்பு பணிகள் உள்ளிட்டவற்றுக்காகவும் செலவிடப்பட்டு உள்ளது.
கடலோரத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக, ரடார், அதிவேக ரோந்து படகுகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக,கடலோரக் காவல் படை, 400 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து, போலந்து, ஸ்லோவேக்கியா, பின்லாந்து மற்றும் இலங்கையில் இருந்து, முப்படைகளுக்கு தேவையான, தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ரஷ்யா, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத்துடன், முதலிடத்தை பிடித்துள்ளது.
புதுடில்லி::பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பார்லிமென்டில்
கூறியதாவது:கடந்த, 2010 - 11 முதல் 2012 - 13 வரையிலான, மூன்று நிதியாண்டுகளில்,
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தேவையான ஆயுதங்கள், பாதுகாப்பு
சாதனங்களை இறக்குமதி செய்த வகையில், 2.35 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு
உள்ளது.முப்படைகளில், ராணுவத்திற்கான ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்காக, மிக அதிக
அளவில், அதாவது, 1.92 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விமானப் படை:
விமானப் படை:
இதில், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.விமானப் படைக்காக, 38,900 கோடி ரூபாய் மதிப்பிலான, ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. கப்பற் படை, கடந்த மூன்றுநிதியாண்டுகளில், பாதுகாப்புசாதனங்களின் இறக்குமதிக்காக, 4,000 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது.இத்தொகை, பி-18 விமானம் தாங்கி நீர்மூழ்கி கப்பலுக்காக, ஹர்பூன் ஏவுகணைகள் வாங்கவும், ரஷ்யாவில், நீர்மூழ்கி கப்பல்களின் புதுப்பிப்பு பணிகள் உள்ளிட்டவற்றுக்காகவும் செலவிடப்பட்டு உள்ளது.
கடலோரத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக, ரடார், அதிவேக ரோந்து படகுகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக,கடலோரக் காவல் படை, 400 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து, போலந்து, ஸ்லோவேக்கியா, பின்லாந்து மற்றும் இலங்கையில் இருந்து, முப்படைகளுக்கு தேவையான, தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ரஷ்யா, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத்துடன், முதலிடத்தை பிடித்துள்ளது.
முன்னுரிமை:
நாடு சுயசார்புடன் விளங்கவேண்டும் என்ற நோக்கிலும், உள்நாட்டு தயாரிப்பிற்கு
முன்னுரிமை அளிக்கும் வகையிலும், ஆயுத கொள்முதல் கொள்கையை மாற்றி அமைத்துள்ளோம்,
என்றார்.

No comments:
Post a Comment