Wednesday, August 14, 2013

இந்­தி­யா­வுடன் சிறு­சிறு பிரச்­சி­னைகள் இருந்­தாலும் இந்­திய அர­சாங்­கத்­துடன் இணைந்து எமது அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன:பஷில் ராஜபக்ஷ!

Wednesday, August 14, 2013
இலங்கை::இலங்­கையில் வாழும் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு உத­வு­வதில் இந்­தியா பின்­நிற்­கின்­றது. இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை கொலை செய்­த­துடன் இந்­திய அமைதிப் படை­யி­னர்­மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களே ஆவர். தாக்­குதல் நடத்­திய பகுதி மக்­க­ளுக்கே, இந்­தியா அதிக உத­வி­களை செய்­வ­தற்கு முனை­கின்­றது என்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ரு­மான பஷில் ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யா­வுடன் சிறு­சிறு பிரச்­சி­னைகள் இருந்­தாலும் இந்­திய அர­சாங்­கத்­துடன் இணைந்து எமது அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. கிளி­நொச்சி வரை­யான ரயில் பாதை அமைக்கும் பணி பூர்த்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. அடுத்த மாதம் 15ஆம் திகதி புதிய ரயில்­பா­தையில் சேவைகள் ஆரம்­பிக்­கப்­படும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்­திய ஊட­க­வி­ய­லாளர் குழு­வொன்று இலங்­கைக்கு விஜயம் செய்­துள்­ளது. இந்தக் குழு­வினர் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரசின் தலை­வ­ரு­மான பிர­பா­க­ணே­சனின் ஏற்­பாட்டில் நேற்று முற்­பகல் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போது அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இலங்­கைவாழ் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு இந்­திய அர­சாங்கம் உத­வு­வதில் பின்­ன­டிப்பு செய்­கின்­றது. பல தட­வைகள் இது­கு­றித்து எடுத்­துக்­கூ­றி­யுள்­ள­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்தில் இந்­திய அர­சாங்கம் அக்­க­றை­காட்­டு­வ­தாக இல்லை.

வடக்கு கிழக்கு பகு­தி­க­ளி­லேயே அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்­கொள்ள இந்­தியா அக்­கறை காட்­டு­கின்­றது. இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை கொன்­ற­துடன் இந்­திய இரா­ணு­வத்­தி­னர்­மீது தாக்­குதல் நடத்தி இந்­திய அமைதிப் படை­யி­னரை மீண்டும் திருப்பி அனுப்­பு­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்­களைச் சேர்ந்­த­வர்­க­ளே­யாவர். ஆனால் இந்­திய அர­சாங்­க­மா­னது அப்­ப­கு­திக்கே உத­வி­களை செய்­வதில் முன்­னிற்­கின்­றது.

50 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்கு இந்­தியா உதவி செய்­துள்­ளது. இதில் 45 ஆ­யிரம் வீடுகள் வடக்கு கிழக்கு பகு­தி­க­ளி­லேயே அமைக்­கப்­பட வேண்டும் என்­பதில் இந்­தியா உறு­தி­யாக நின்­றது. மலை­யகப் பகு­திக்கு 4 ஆயிரம் வீடு­களை விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு நாம் படா­த­பாடு பட­வேண்­டி­யி­ருந்தது. 45 ஆயிரம் வீடு­களை அமைக்கும் பணி­யினை உட­ன­டி­யாக வட­கி­ழக்கில் ஆரம்­பிக்­கு­மாறு இந்­தியத் தூதுவர் எம்­மிடம் வலி­யு­றுத்­தினார். ஆனால் மலை­ய­கத்தில் 4 ஆயிரம் வீடுகள் அமைக்­கப்­பட வேண்­டு­மென நாம் கோரி­ய­போது ஆலோ­ச­னைகள் இன்­னமும் கிடைக்­க­வில்லை என்றும் வேறு­பல சாட்­டுக்­களும் கூறப்­பட்­டன.

இந்­திய வம்­சா­வளி மக்கள் போராட்­டங்­களை நடத்­த­வில்லை. ஆயு­தங்­களை தூக்­க­வில்லை. ஆனாலும் இந்த மக்­க­ளுக்கு உத­வு­வதில் இந்­தியா பின்­ன­டிப்புச் செய்­கின்­றது.

இந்­தி­யாவின் உத­வி­யுடன் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம். வவு­னி­யாவில் இந்­திய வம்­சா­வளி மக்­களை பதி­வு­செய்ய நாம் முற்­பட்­ட­போது இந்­தியா வம்­சா­வளி மக்கள் என பத­வி­செய்­ய­வேண்­டா­மெ­னவும் இலங்கைத் தமி­ழர்கள் என பதி­வு­செய்­யு­மாறும் ஒரு குழு அச்­சு­றுத்­தி­யுள்­ளது. இருந்­த­போ­திலும் எத்­த­கைய பாதிப்­பு­மின்றி நாம் செயற்­ப­டு­கின்றோம்.

இந்­தியா பல அபி­வி­ருத்தித் தி­ட்டங்­க­ளுக்கு எமக்கு உத­வு­கின்­றது. கிளி­நொச்சி வரை­யான புகை­யி­ரதப் பாதை­யினை இந்­தியா அமைத்­துள்­ளது. அடுத்­த­மாதம் 15ஆம் திகதி இந்த புதிய ரயில் பாதை திறக்­கப்­படும். அதேபோல் காங்கேசன்­துறை வரை­யான ரயில் பாதையும் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது. சம்பூர் அனல் மின் நிலை­யமும் இந்­தி­யா­வுடன் இணைந்தே மேற்­கொள்­ளப்­படும். பலா­லியில் விமான ஓடு­பா­தையும் இந்­தி­யாவின் உத­வி­யுடன் அமைக்­கப்­படும்.
வட­ப­கு­தியில் சாதி முரண்­பாடு இன்­னமும் காணப்­ப­டு­கின்­றது.

அண்­மையில் வடக்கில் தென்னை மரக்­கன்­றுகள் வழங்கும் வைப­வத்தில் நான் கலந்­து­கொண்­டி­ருந்தேன். தென்­னை­ம­ரத்தை வீட்டில் வைத்தால் சாதி குறைந்தவர்கள் என எண்ணுவார்கள் என்று எம்மிடம் சிலர் தெரிவித்தனர். இவ்வாறு அங்கு சாதி முரண்பாடு காணப்படுகின்றது.

இந்தியா அயல்நாடு என்பதனால் எமக்கும் இந்தியாவுக்குமிடையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படுவது சகஜமாகும். ஆனாலும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகவியலாளர் குழுவினர் இச்சந்திப்பில் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ வுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் பரிசில்களையும் வழங் கியுள்ளனர்.

No comments:

Post a Comment