Tuesday, August 13, 2013

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 14 மில்லியன் ரூபா செலவில் இரத்த சுத்திகரிப்பு பிரிவு!

Tuesday, August 13, 2013
இலங்கை::திருகோணமலை பொது வைத்தியசாலையில் 14 மில்லியன் ரூபா செலவில் இரத்த சுத்திகரிப்பு பிரிவு 
 
12.08.2013 திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம இன்று திங்கட்கிழமை காலை இதனைத் திறந்து வைத்தார்.
 
மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.நிக்கோட் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இது அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment