Thursday, August 15, 2013
புதுடெல்லி::இந்தியாவின் 67–வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:–
நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்துத் துறை களிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டில் பல முக்கிய வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும், அது நீண்ட நாட்களுக்கு இருக்காது. விரைவில் நமது பொருளாதார வளர்ச்சி மேம்பாடு பெறும். நாட்டு மக்களின் உணவு தேவையை உறுதிப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். உணவு பாதுகாப்பு மசோதா காரணமாக நமது நாட்டில் 75 சதவீதம் மக்கள் பயன்பெறுவார்கள்.
1947–ம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நாம் சுதந்திரம் பெற்ற பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மாற்றத்தை பெற்று வருகிறோம். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு பல நல்லது நடந்துள்ளது. நமது நாட்டில் சாதாரண மக்கள் பலம் பெறும் வகையில் ஜனநாயகம் வலுப்படுத்தப்படும். அதற்கு ஏற்ப நவீன இந்தியாவை உருவாக்க, வளர்ச்சி பாதையை ஐக்கிய முற்போக்கு அரசு செய்து வருகிறது. சமூக நீதி நிறைந்த இந்தியாவாக நமது நாட்டை நாங்கள் விரும்புகிறோம். சமூகத்தில் எந்த பிரிவினருக்கும் அநீதி ஏற்படுத்த விடமாட்டோம்.
நமது நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது எங்களது கனவாகும். இந்த லட்சியத்தை நோக்கி நாங்கள் அடியெடுத்து வைத்துள்ளோம். இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். நமது நாட்டில் உள்ள விவசாய துறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். விவசாயம் வளர்ச்சிப் பெறாமல் நமது கிராமங்களில் செழிப்பை ஏற்படுத்த முடியாது. பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் வளர்ச்சி 3.6 சதவீதமாக இருந்தது. 2004–ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் வறுமை குறைந்துள்ளது. கல்வி மேம்பாட்டிலும் நாம் பல முத்திரை பதித்துள்ளோம். 2 கோடிக்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகளுக்கு மத்திய அரசு, படிப்புக்கு பண உதவி செய்துள்ளது. 8 புதிய ஐ.ஐ.டி.க்கள், 7 புதிய ஐ.ஐ.எம்.க்கள், 16 பல்கலைக்கழகங்கள், 10 புதிய என்.ஐ.டி.க்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. 11 கோடி ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. பீகார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயரம் போன்று நாட்டில் எங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடெங்கும் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு நவீன சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவத் துறையிலும் நாம் பல சாதனைகள் படைத்துள்ளோம். போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பையும் நாம் மேம்படுத்தி உள்ளோம். என்றாலும் நக்சலைட்டுக்களை நாம் இன்னமும் முழுமையாக ஒடுக்கவில்லை. கடந்த மே மாதம் 25–ந்தேதி நக்சலைட்டுக்கள் நடத்திய தாக்குதல், நமது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த பேரழிவு நம்மை எல்லாம் கவலை கொள்ளச் செய்தது. அந்த பேரழிவில் சிக்கி உயிருக்காகப் போராடியவர்களை நமது ராணுவம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு மீட்டது. இதற்காக நான் நமது ராணுவ வீரர்களை மனதார பாராட்டுகிறேன். மும்பையில் நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது துரதிர்ஷ்டவசமானது. நமது அண்டை நாடுகளுடன் சுமூக உறவை மேம்படுத்த நாம் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. அதோடு தன் மண்ணில் தீவிரவாதத்துக்கு உதவுகிறது. தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்வதை பாகிஸ்தான் கைவிட வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் நல்லுறவை பேண முடியாது. தீவிரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இயலாது.
நமது நாட்டின் ஊரகப் பகுதிகளில் பொருளாதார செழிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரகப் பகுதிகளில் 4 மடங்கு நுகர்வு அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் நாம் உயர் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். வரும் மாதங்களில் புதிய உள் கட்டமைப்பு திட்டங்களை நாங்கள் தொடங்க உள்ளோம்.
2 துறைமுகங்கள், 8 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. ஏராளமான புதிய ரெயில் பாதைகளும் போட திட்டமிடப்பட்டுள்ளது. 37 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 விமான நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய உள் கட்டமைப்பு திட்டப்பணிகளில் நமது வளர்ச்சி அதிகரித்துள்ளது. பெரிய திட்டப் பணிகளுக்கு உதவ தனி செல் தொடங்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியிலும் நாம் மகத்தான சாதனை படைத்துள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

No comments:
Post a Comment