Thursday, August 15, 2013
இலங்கை::மாகாண சபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளவர்களுக்கான வா
க்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 22ஆம் திகதி அஞ்சல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
குறிப்பிட்ட தினத்தில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் தமது தபால்மூல வாக்கினை அளிப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பம் காணப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் பணிகளுக்கு தொழிலாளர்களை இணைத்துகொள்ள நடவடிக்கை!
மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள பிரதேசங்களில் தேர்தல் பிரசார பதாகைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தேர்தல்கள் செயலகம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல் பிரசார பதாகைகளை அகற்றுவதற்கு 9 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக்க சிறிவர்தன தெரிவிக்கின்றார்.
அதன் பிரகாரம் தலைமையக பொலிஸ் நிலையங்களுக்கு நால்வரும், நாகர்சார் பொலிஸ் நிலையங்களுக்கு 3 தொழிலாளர்களும், சிறியளவிலான பொலிஸ் நிலையங்களுக்கு 2 தொழிலாளர்களும் இணைத்துக்கொள்ளப்படுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 மாகாண சபைகளினதும் தேர்தலுக்காக பொலிஸ் திணைக்களத்திற்கு மாத்திரம் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment