Wednesday, August 21, 2013
இலங்கை::இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளில் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இந்தியா பகிஷ்கரிப்பதற்கான நடவடிக்கை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதில் முதன்மையாக இருந்து செயற்பட்டு வருகிறார்.
அதேவேளை கனடாவுக்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கடந்த 12 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்தனர். இவர்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர் எனவும் திவயின கூறியுள்ளது.

No comments:
Post a Comment