Wednesday, August 21, 2013

இலங்கையில் புலிகள் மற்றும் பாகிஸ்தானின் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையுமில்லை: ருவான் வணிகசூரிய!

Wednesday, August 21, 2013
இலங்கை::இலங்கையின் வடக்கில் புலிகள் மற்றும் பாகிஸ்தானின் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையுமில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

எந்த தீவிரவாத அமைப்பும் வடக்கில் மீண்டும் செயற்படுவதற்கு இராணுவம் இடமளிக்காது. நாட்டில் எவ்விதமான தீவிரவாத ஆபத்துகளும் இல்லை என்பதை உறுதியாக கூறமுடியும் என்றார்.

8 தீவிரவாதிகள் பாகிஸ்தானின் தீவிரவாத பயிற்சிகளை பெற்று வருவதாகவும் இலங்கையின் வடக்கிலிருந்து தென்னிந்தியா மீது தாக்குதல் நடத்துவதே அவர்களின் இலக்கும் என்றும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவான றோ அமைப்பு எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை பிரசுரித்திருந்தன.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இலங்கையின் இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
 

No comments:

Post a Comment