Wednesday, August 21, 2013

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 8 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகம் வந்து தென்னிந்திய பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்!

Wednesday, August 21, 2013
மும்பை::பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 8 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகம் வந்து தென்னிந்திய பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்திய புலனாய்வு அமைப்பு மகாராஷ்டிர காவல்துறைக்கு அனுப்பியுள்ள 9 பக்க எச்சரிக்கைக் கடிதத்தில், பஞ்சாபிகள் 4 பேரும், காஷ்மீரி மற்றும் பத்தன்ஸை சேர்ந்த 4 பேரும் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்று தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் தமிழகத்தின் மயிலாடுதுறை அல்லது மதுரையை குறி வைத்து இன்னும் ஒரு சில மாதங்களில் தாக்குதல் நடத்தலாம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலமாகவோ அல்லது கடல் வழியாக தமிழ்நாடு அல்லது கேரளாவுக்கோ ஊடுருவ திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment