Sunday, August 18, 2013
இலங்கை::எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை கொழும்பில் நடாத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிட்டிய மாபெரும் வெற்றியாகவே கருத வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். லக்கலவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்துவதன் மூலம் நாடு பாரியளவில் நன்மைகளை அடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறுகிய நோக்கங்களை உடைய சில தரப்பினர் அமர்வுகளுக்கு எதிராக போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமர்வுகளை நடாத்துவதன் மூலம் உலகத் தலைவர்களுக்கு நாட்டின் மெய்யான நிலைமைகளை நேரில் பார்வையிட சந்தர்ப்பம் கிட்டும் என குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment