Monday, August 19, 2013
சென்னை::மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், நாராயணசாமி ஆகியோர் டெல்லி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களிடம் கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு மந்திரி பெரீஸ் கூறியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ஜி.கே.வாசன் கூறுகையில், இலங்கை மந்திரியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பேச்சு இந்தியா– இலங்கை உறவை பாதிக்கும் செயலாகும் என்றார்.
நாராயணசாமி கூறும் போது கச்சத்தீவு பிரச்சினை குறித்து சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்வார்கள். இலங்கை அமைச்சரின் பேச்சு நட்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாதிக்கும். இதனை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
இது பற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மந்திரியின் பேச்சு கண்டிக்கதக்கது என்றார்.


No comments:
Post a Comment