Monday, August 19, 2013
இலங்கை::புலிகள் இயக்கம் சார்பான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அவ்வாறு அத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர் கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானி யங்கள் ஆணைக் குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நான்கு விரிவுரையாளர்கள் மீதும் முதலில் விரிவான விசாரணை நடத்தப்படும் என இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்சனிக்கா ஹிரிபும்புரேகம தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் நடைபெறும் தமிழ் மொழி கருத்தரங்குகளில் பங்கேற்கச் செல்வதாகக் கூறி இந்த நான்கு விரிவுரையா ளர்களும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலி ஆதரவு பிரிவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக உறுதி செய்யப்பட்டால் விரிவுரையாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் க்சனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
யாழ். ஊவா மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூவரே புலி ஆதரவு பிரிவு கருத்தரங்கில் பங்கு பற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் பங்கு பற்ற நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்கள் லண்டன் சென்றுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment