Tuesday, August 20, 2013
இலங்கை::இலங்கையில் யுத்தக்காலத்தில் சரணடைந்து காணாமல் போன உறவுகளின் நலனிற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன்' – புலிகளின் முக்கியஸ்தர் எழிலன் இன் மனைவி என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கணவருக்காக சிலம்பைத் தூக்கியுள்ளார்.
இலங்கை::இலங்கையில் யுத்தக்காலத்தில் சரணடைந்து காணாமல் போன உறவுகளின் நலனிற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன்' – புலிகளின் முக்கியஸ்தர் எழிலன் இன் மனைவி என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கணவருக்காக சிலம்பைத் தூக்கியுள்ளார்.
நல்ல விடயம்தான். யுத்தகாலம் என்று குறிபிடுவது தோரயமாக 1983 தொடக்கம் 2009 மே மாதம் 18ம் திகதிவரை என்றுதான் நான் எண்ணுகின்றேன். அப்படியாக இருப்பின் இதற்காக உங்களுடன்; இணைந்து நானும் குரல் கொடுக்கவும், தொடர்ந்து போராடவும் தயாராக இருக்கின்றேன் அம்மணி. அல்லாது இறுதி யுத்த காலகட்டத்தில் மட்டும் காணமல் போன, அல்லது சரணடைந்த புலிகளின் நலன்களிற்காக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்ற கோதாவில் சொல்வார் ஆகின் என்னிடத்தில் அவருக்கு எதிரா பல கேள்விகள் உள்ளன. ஒரு கேள்வியை மட்டும் முன்வைக்கின்றேன்,
மாற்று இயக்கங்களை புலிகள் தடைசெய்தபோது புலிகளால் காணாமல் போன மாற்று இயக்கத்தினர் அல்லது புலிகளிடம் சரணடைந்த மாற்று இயக்க போராளிகள் அல்லது மாற்றுக் கருத்துடைய பொது மக்கள் இவர்கள் எல்லாம் உயிர்கள் இல்லையா....? இன்று வரை திரும்பி வருவார் என்று ஏக்கிக்கொண்டிருக்கும் பல தாய்மார்கள், சகோதரிகள், ஏன் கணவன்மார்கள், மனைவிமார்கள் பிள்ளைகள் என்று நிறையப்பேர் இலங்கைலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ளனர். இவர்கள் யாரும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிய விரும்பவில்லையா...?. இவற்களுக்காகவும் குரல் கொடுக்கத் தயாரா...? சனல் 4 உம் மேற்கத்திய நாடுகள் பலவும் மாற்று இயக்க போராளிகள் புலிகளால் கொலை செய்யப்பட்டபோது சிறைபிடிக்கப்பட்டு
துணுக்காய் போன்ற முகாங்களில் வைத்து சித்திரைவதையின் பின்பு காணாமல் போனபோது குரல் கொடுக்கவில்லை. இவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் இல்லையா...?
ஏன் தமிழநாட்டில் உள்ள 'தமிழ் உணர்வாளர்கள்' யாரும் குரல் கொடுத்ததாக வரலாறு இல்லை. (கருணாநிதி கொடுத்த குரல் அரசியலுக்காக மட்டுமே) ஏன் அதிக தூரம் போவான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சிகளான தமிழரசுக் கட்சி, சுரேஷ் அணி ஈ.பி,ஆர்.எல்.எவ், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைத்து பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்தபோது இந்த கொலைகளைப்பற்றி அல்லது காணாமல் போதல் பற்றி பிரபாகரனிடமோ அல்லது தமிழ்செல்வனுடனோ அன்று கேட்கவில்லை. இன்றும் மூச்சும் விடவில்லை.
சரி ஒரு பேச்சுக்கு எற்றுக்கொள்வோம் அன்று இவற்றை கண்டித்திருந்தால் தங்களையும் புலிகள் புதைத்து இருப்பார்கள் இதனால்தான் தமது தலைவன் அமிர்தலிங்கம், பத்மநாபா, சிறீசபாரத்தினம் பற்றி நாம் மூச்சும் விடவில்லை என்று காரணம் கூறலாம்.. இன்றுதானே புலியும் இல்லை, புலிகளின் பூனையும் இல்லை உள்ளத்தில் சுத்தம் இருந்தால் நெஞ்சில் உரம், நீதி, நியாயம் இருந்தால் இவற்றை கண்டிக்கலாம்தானே இன்று.
மனச்சாட்சி இருந்தால் நவநீதம்பிள்ளையை சந்திக்கும்போது புலிகள் செய்த சகல தரப்பு கொலைகளையும் அங்கு பட்டியல் இடுங்கள். கூடவே நீங்கள் மக்களால் தேர்தலில் தேர்தெடுக்கப்படாவிட்டாலும் மக்கள் மனங்களில் என்றென்றும் நிறுத்தப்படுவீர்.

No comments:
Post a Comment