Tuesday, August 20, 2013

இன்று 69–வது பிறந்த நாள்: ராஜீவ்காந்தி சமாதியில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை!

Tuesday, August 20, 2013
புதுடெல்லி::புலிகளினால் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 69–வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
 
டெல்லியில் ராஜீவ் காந்தி சமாதி அமைந்துள்ள வீர்பூமியில் இன்று காலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கமல்நாத், சல்மான் குர்ஷித், ஆஸ்கர் பெர்னாண்டஸ், டெல்லி முதல்–மந்திரி ஷீலா தீட்சித் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அவர்களுடன் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர்கள் பலர் ராஜீவ் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ராஜீவ் சமாதியில் அருகே மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேச பக்தி பாடல்கள் இசைக்கபட்டன. இதில் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த பிரார்த்தனை கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment