Tuesday, August 20, 2013
இலங்கை::எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் நடவடிக்கைகளை மும்மொழிகளில் முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம், தேசிய மொழிகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
இலங்கை::எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் நடவடிக்கைகளை மும்மொழிகளில் முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம், தேசிய மொழிகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
விசேடமாக தேர்தலுக்கு பய
ன்படுத்தும் ஆலோசனை கையேடுகள், அறிவித்தல்கள் உள்ளிட்ட ஆவணங்களை மும்மொழிகளில் தயாரிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதே இதன் நோக்கமென அவர் கூறியுள்ளார்.
அதற்குத் தேவையான அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தேசிய மொழிகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment