Saturday, August 24, 2013
இலங்கை::தமிழ் அரசியல்வாதிகளில் பலர் போர் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்கள்
தொடர்பில் எடுக்க போகும் நடவடிக்கை என்ன என்பது குறித்து தாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்ப உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அருண் தம்பித்து முத்து தெரிவித்துள்ளார்.
தாம் 26 ஆம் திகதி நவிபிள்ளையை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் முன்னாள் போராளிகள் எனவும் அவர்கள் போரில் ஈடுபட்டகாலத்தில் யார் பொறுப்புக் கூறவேண்டும் என்ற கேள்வியை தாம் அவரிடம் முன்வைக்க உள்ளதாகவும் அருண் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தின் நிலைமைகளை பார்வையிட வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் காலஅவகாசம் இல்லை என்பதால் அங்கு வரமுடியாது என அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவநீதம்பிள்ளையிடம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் காவற்துறை அதிகாரங்களின் பாதிப்பான நிலைமை குறித்தும் தெளிவுப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment