Wednesday, August 14, 2013
இலங்கை::அமெரிக்காவுடன் முரண்பாடுகள் கிடையாது என அமெரிக்காவிற்கான இலங்கை தூதவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
சில விடயங்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய போதிலும், முரண்பாடுகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது, புலி ஆதரவு அமைப்புக்களுக்கு எதிராகவும் அமெரிக்கா மெய்யான ஒத்துழைப்பை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பயிற்சி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அமெரிக்கா இலங்கைக்கு ஒத்தழைப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போதும் நல்லிணக்க முனைப்புக்களின் போதும் அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட முதல் மேற்குலக நாடாக அமெரிக்கா திகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவில் காத்திரமான பரிந்;துரைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவி;த்துள்ளார்.
எவ்வாறு எந்தக் காலப்பகுதியில் பரிந்துரைகளை அமுல்படுத்துவது என்பது தொடர்பில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவி வருவதாகவும், இதனை விரிசலாக கருத முடியாது எனவும் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment