Wednesday, August 14, 2013
இலங்கை::மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தமது அமைப்பிற்கு 94 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறினார்
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுகின்றமை தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாத்தளை, குருநாகல் மற்றும் கண்டி மாவட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் சில பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தமது அமைப்புக்கு அவ்வாறான 56 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹேட்டியாராச்சி தெரிவித்தார்.
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே அதிகளவிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment