Friday, August 23, 2013
இலங்கை::இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 529 பேர் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களிலும் அங்குள்ள உறவினர்களின் வீடுகளிலும் இருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்களில் 68 ஆயிரத்து 58 பேர் இந்தியாவில் உள்ள 110 அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 34 ஆயிரத்து 471 பேர் உறவினர்கள்,நண்பர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச தெரிவித்துள்ளார்.
இவர்களில் இலங்கை திரும்ப விரும்பும் அனைவரையும் இலங்கைக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து, நாடு திரும்பும் நபர்களுக்கான விமானப் பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கிய வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை நாடு திரும்பும் அகதிகள் அவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்த இடங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளும் மீள்குடியேற்றத்திற்காக 25 ஆயிரம் ரூபா பணம் உட்பட வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது எனவும் சுகததாச குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment