
Tuesday, August 20, 2013
இலங்கை::சில கட்சிகள் இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்ய முற்படுகின்றன. இதனை ஏற்க முடியாது என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். ஐ.ம.சு.மு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
சில கட்சிகள் இனவாதத்தையும், குரோதத்தையும் தூண்டி அரசியல் செய்கின்றன.
வடக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் வடபகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
30 வருடங்கள் பின்தங்கிய வடபகுதியில் பாரிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் தமிழரா முஸ்லிமா? சிங்களவரா? என்பது முக்கியமல்ல, இலங்கையர்என்ற வகையில் நாம் செயற்பட வேண்டும்.
மக்கள் மத்தியில் பிளவையும் குரோதத்தையும் ஏற்படுத்தப்படும் முயற்சிகள் குறித்து கவலை கொள்கிறோம். புலிகள் இருந்தபோது பாராளுமன்றத்தில் கூட தமிழகம் குறித்து சிலர் பேசினர்.
தமிழ் மக்கள் ஏன் ஐ.ம.சு.மு வுக்கு வாக்களிக்கவேண்டும். ஏனைய பகுதி மக்களைவிட வடக்கு, கிழக்கு மக்களுக்கு கூடுதல் சேவை செய்யப்பட்டு வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment