Tuesday, August 20, 2013

இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சியில் இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்!

Tuesday, August 20, 2013
சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சியில் இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், இலங்கையை நட்பு நாடாக பார்க்காவிட்டால், 13வது சட்டதிருத்தம் தொடர்பாக யாரிடம் பேசுவது. இலங்கையில், ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என கூறினார்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 4,000 கோடி ரூபாய் செலவில், பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்து வர, அங்கு நிருபர்களை அனுப்பிவைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
 
இதுகுறித்து, காங்கிரஸ் மேலிடத்தில் எடுத்துக் கூறியுள்ளேன். "இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது; இலங்கை நட்பு நாடு கிடையாது' என, தமிழக அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.
 
அப்படி என்றால், இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, 13வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் குறித்து, யாரிடம் பேச வேண்டும் என, அந்தத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். இலங்கையில் வாழும் சிங்கள மக்களிடையே, இனவெறி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அங்குள்ள அரசியல்வாதிகளிடம் இனவெறி இருக்கலாம். இவ்வாறு, ஞானதேசிகன் கூறினார்.

No comments:

Post a Comment