Tuesday, August 20, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில், கலந்து
கொள்ள வேண்டுமென, பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை அமைச்சர் பெரீஸ், அழைப்பு
விடுத்தது தவறில்லை என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி அளித்த பேட்டி:
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள, காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில்
பங்கேற்க வரும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அழைப்பு விடுக்க, இலங்கை
அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள், டில்லி வந்துள்ளனர்; அது தவறல்ல. "காமன்வெல்த்
மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர்
கருணாநிதி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்
ஞானதேசிகன், டில்லி சென்று நேரடியாக, இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைச்
சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றன.
காமன்வெல்த் மாநாடு, நவம்பரில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா பங்கேற்பது குறித்து,
வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கலந்து பேசி, பிரதமர் நல்ல முடிவை
எடுப்பார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

No comments:
Post a Comment