Wednesday, August 28, 2013

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் எம்.பி. நான்காம் மாடிக்கு அழைப்பு!


Wednesday, August 28, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு நான்காம் மாடிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
 
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு நான்காம் மாடியில் ஆஜராகுமாறு நேற்று செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு பொலிஸாரே மேற்படி கடிதத்தினை அரியநேத்திரன் எம்.பி.யின் வீட்டில் சேர்த்துள்ளனர்.
 
இது தொடர்பில் அரியநேத்திரன் எம்.பி. கூறுகையில்:-
 
வடமாகாண தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நான் தற்போது வவுனியாவில் இருக்கின்றேன். இன்று காலை நேற்று செவ்வாய்க்கிழமை
10.00 மணியளவில் மட்டக்களப்பிலுள்ள எனது வீட்டுக்கு வந்த பொலிஸார் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் இருந்து கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும், எதிர்வரும் 03ஆம் திகதி கொழும்பிலுள்ள நான்காம் மாடியில் விசாரணைக்காக ஆஜராகுமாறும் தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே 2008ஆம் ஆண்டிலும் நான் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தேன்.
வெளிநாடொன்றில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் அப்போது விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என் மீது வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
 
பின்னர் அந்த வழக்கு தள்ளுபடியானது.தற்போது மீண்டும் இரண்டாவது தடவையாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நான்காம் மாடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. என்ன காணத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பில் எதுவும் அறியத்தரவில்லை.
 
தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பு எம்.பி.க்கள் மீதான குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்றார்.

No comments:

Post a Comment