Wednesday, August 28, 2013

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: அதிரடிப்படை கமாண்டர் உள்பட இருவர் பலி!

Wednesday, August 28, 2013
ராய்ப்பூர்::சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் உள்ள பஸ்தர் மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அவர்களை ஒடுக்குவதற்காக, பஸ்தர் மற்றும் கொண்டகான் மாவட்டத்திற்கு இடைப்பட்ட காடுகளில் அதிரடிப்படை வீரர்கள் இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

பின்னர் அந்த காடுகளில் இருந்து வீரர்கள் நேற்று வெளியே வந்தபோது, நக்சலைட்டுகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அதிரடிப்படை கமாண்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் பலத்த  காயமடைந்தனர்.
துப்பாக்கி குண்டுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தனர்.

நாராயண்பூர் காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த சண்டை நடந்தது. இதில் இரு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதிகளுக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment