Monday, August 26, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலிகளுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு செயற்படத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் யதார்த்தமான உரிமைகளுக்காக லங்கா சமசமாஜ கட்சி குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் அரசாங்கத்திற்கு, கூட்டமைப்பு உதவியளிக்கத் தவறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாறாக புலி ஆதரவு தரப்பினருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமே தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களினால் தமிழ் மக்கள் பாரியளவில் நன்மைகளை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment