Monday, August 26, 2013
இலங்கை::இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் அதிகாரிகளை சந்தித்தார்.
அதற்கு முன்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர் நான் விமர்சனங்களை மேற்கொள்வதற்காக தான் இலங்கைக்கு வருகைதரவில்லை எனவும் நவனீதம் பிள்ளை இதன்போது கூறியுள்ளார்.
இங்கு வரக்கிடைத்தமை தொடர்பில் உண்மையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். மனித உரிமைகள் ஆணையாளர் என்ற வகையில் முதல் முறையாகவே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன். இதற்கு சில காலத்திற்கு முன்னர் அரசாங்கம் அழைப்பு விடுத்தமை உண்மை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகும் வரை இந்த விஜயத்திற்காக காத்திருந்தேன். நான் இந்த விஜயத்தின் போது இலங்கையின் மனித விவகாரங்கள் தொடர்பில் அரச தரப்புடனும், சிவில் செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன். முடியுமான அளவு பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலமைகளை ஆராயவுள்ளேன்.''

இந்த விஜயத்தின் பின்னர் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கையொன்றை சமர்பிக்கவுள்ளேன். குறிப்பாக நான் விமர்சங்களை செய்வதற்காக இலங்கைக்கு வருகை தரவில்லை என்பதனைக் கூற வேண்டும். மனித உரிமைகள் தொடர்பில் ஆராயவே இங்கு வந்தேன். சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் ஏனைய நாடுகளில் எவ்வாறு கண்காணிகப்படுகின்றதோ அதே போன்றே இலங்கையிலும் கண்காணிக்கிறேன்.
எனவே இலங்கை தொடர்பில் தயாரிக்கப்படும் அறிக்கை எனது அறிக்கையல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று அந்த பின்புலத்திலேயே அறிக்கை தயாரிக்கப்படும். அந்த பின்புலத்தை உருவாக்குவதற்கு இலங்கையும் பங்காளராகியுள்ளது. நான் விமர்சனம் மேற்கொண்டாலும் அதன் மூலம் என்ன புலப்படும்?'' அந்த வியூகத்தின் அடிப்படையில் செயற்படும் முறைமை புலப்படும்.

No comments:
Post a Comment