இலங்கை::இலங்கை இராணுவத்தின் நிரந்தர படைப்பிரிவின் பெண் படைப்பிரி
வுக்கு 45 தமிழ் பெண்கள் உட்பட 55 பேர் புதிதாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களை பணியில் இணைத்து கொள்ளும் நிகழ்வு இன்று வவுனியா இராணுவ தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
வுக்கு 45 தமிழ் பெண்கள் உட்பட 55 பேர் புதிதாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களை பணியில் இணைத்து கொள்ளும் நிகழ்வு இன்று வவுனியா இராணுவ தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இராணுவத்தில் இணைக்கப்பட உள்ள 10 பெண்கள் சிங்கள பெண்கள் எனவும் இவர்களுக்கு தமிழ் மொழியை சரளமாக கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, மட்டக்களப்பு, வன்னி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சேர்ந்த இந்த பெண்களுக்கு ஆரம்ப கட்ட பயிற்சிகள் வவுனியாவில் வழங்கப்பட உள்ளன. அத்துடன் இவர்களுக்கு இராணுவ தொழிற்பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாக வன்னி இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் போனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment