Monday, August 26, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணம் வரும்; போது தேர்தல் சட்டங்கள் மீறப்பட இடமளிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் எஸ்.தவராசா தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சில அரசியல் கட்சிகள், அதன் அரசியல் தலைவர்களை சந்திக்க மனித உரிமை ஆணையாளர் நேரம் ஒதுக்கியுள்ளதாக அனைத்து ஊடகங்களிலும் பிரசாரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் நவநீதம்பிள்ளை, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை சந்திக்க உள்ளமை இந்த செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. நவநீதம்பிள்ளை இலங்கையின் சில இடங்களில் மனித உரிமைகளின் முன்னேற்றங்கள் குறித்து தீர்மானிப்பதற்காக வந்துள்ளார். இவரது வருகையை பயன்படுத்தி, வடக்கில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் தேர்தலில் தமக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்டவிரோதமானது. அத்துடன் அநீதியான ரீதியில் வடபகுதி வாக்காளர்களுக்கு அழுத்தங்களை கொடுப்பதாகவும் அமையும் என்று தவராசா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment