Monday, August 26, 2013
இலங்கை::ஜெனீவாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் பேரவை இலங்கையில் மனித உரிமை மீறல் கள், யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக வெளிவந்த அரசாங்க எதிர்ப்பு அமைப்புகளினதும், எல்.ரி.ரி.ஈயின் வெளி நாட்டு ஆதரவாளர்களினதும் அழுத்தங்கள் காரணமாக சுமார் மூன்றாண்டு காலமாக இலங்கைக்கு எதிரான விசாரணைகளை நடத்தி வந்தது.
இரு தடவைகள் பொதுவாக மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் உச்சிமாநாட்டில் இலங்கை விடயமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பேரவைக் கூட்டங்களின் போது இலங்கைக்கு எதிராக நம் நாட்டைச் சேர்ந்த தேசத்துரோகிகளும், எல்.ரி.ரி.ஈ யின் இலட்சக் கணக்கான டொலர் நோட்டுகளை விழுங்கி, ஏப்பமிடும் அரச சார்பற்ற அமைப்புகளும் ஜெனீவாவுக்கு இங்கிருந்து ஆட்களை கூட்டிச் சென்று போலிப் பிரசாரங்களை அங்கு வழமையாக செய்துகொண்டிருந்தன.
உச்சிமாநாடு நடந்துகொண்டிருக்கும் போது ஜெனீவா மனித உரிமைப் பேரவை கட்டிடத்தில் அமைந்திருக்கும் சுமார் 15 வெவ்வேறு மண்டபங்களில் இலங்கைக்கு எதிரான இத்தகைய தீய சக்திகள், அனேகமாக நாளாந்தம் கூட்டங்களை நடத்தி, அவற்றுக்கு நல்ல விளம்பரங்களைக் கொடுத்து, உச்சிமாநாட்டுக்கு வரும் வெளி நாட்டு பிரதிநிதிகளை அழைத்து, ஜோடிக்கப்பட்ட கற்பனைக் கதைகளை விவரமாக எடுத்துரைப்பதுண்டு.
ஒரே வீட்டில் வைத்து குடும்பத்தினரை இராணுவம் சுட்டு வீழ்த்தியது, எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நிர் வாண கோலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற போலிக்கதையை நிரூபிக்கும் முகமாக லண்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவை நடிகர்களை நடிக்க வைத்து தயாரித்த காட்சிகளை காண்பித்தும் வெளிநாட்டு பிரதிநிதிகளை ஏமாற்ற எத்தனிப்பதுண்டு.
இரண்டு தடவைகளிலும் இலங்கைக்கு எதிராக உச்சிமாநாட்டில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் ஒருசில வாக்கு வித்தியாசங் களில் நிறைவேற்றப்பட்டன. இதனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்று சுமார் 3 வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட போதி லும், இலங்கைக்கு எதிராக வெறும் விமர்சனங்கள் மாத்திரமே இக்காலகட்டத்தில் வெளிவந்தன.
லங்கைக்கு எதிரான போலிப் பிரசாரங்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் அரசாங்கம் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற ஜனாதிபதி அவர்களின் விருப்பத்திற்கு அமைய அரசாங் கம் யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்நாட்டு மக்களுக்கு சகல துறைகளிலும் உதவிகளை செய்து வருகிறது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் 4ஆயிரத்து 700 முன்னாள் புலிபோராளி கள் வாழ்வாதாரத்தை ஆரம்பிப்பதற்கு உதவும் முகமாக ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 525 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்தக் கடன் முன்னாள் போராளிகளுக்கு மட்டுமன்றி பயங்கரவாதத் தினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு கொடுக்கப்படுகிறதென்று புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜயதிலக அறிவித்துள்ளார்.
11ஆயிரத்து 632 முன்னாள் போராளிகளில் 40 சதவீதத்தினர் மாத்திரமே இந்த உதவித்திட்டத்தின் முதலாவது மற்றும் இரண் டாவது கட்டங்களின் போது கடனுதவி பெற்றார்கள். எஞ்சிய வர்களுக்கே இந்தக் கடன் இப்போது கொடுக்கப்படுகிறது.
புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் இதுபற்றி மேலும் தகவல் தருகையில், இவர்களுக்கு அருகில் இருக்கும் இலங்கை வங்கிக் கிளையின் மூலம் அரசாங்க அதிபர் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஊடாக இந்தக் கடனுதவி கொடுக்கப்படும் என்று கூறினார்.
இந்தக் கடனுதவி கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஆகக்கூடிய உதவித்தொகையாக 2 இலட்சத்து 50ஆயிரம் ரூபா வழங்கப்படும். இதனை அவர்கள் மூலாதாரமாக வைத்து சுயதொழில் முயற்சி களை ஆரம்பிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் குறிக் கோளாகும். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் இவ்வாண்டு முடிவதற்கு முன்னர் அர சாங்க அதிபர்கள் இவர்கள் பற்றிய தகவல்களை புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைப்பார்கள்.
யுத்தத்தின் போது அல்லது பயங்கரவாதத்தினால் ஊனமுற்றவர் களுக்கு சமூக சேவைகள் திணைக்களம் மாதமொன்றுக்கு 3,000 ரூபாவை உதவிப்பணமாக வழங்குகிறது. அதுபோன்று இவர்கள் புரியும் தொழில்களுக்கு உதவக்கூடிய வகையில் மேலும் 25ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்த நற்பணிகளை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் எதிர் வரும் மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கக்கட்சி வேட்பாளர் களுக்கு மாபெரும் வெற்றியை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

No comments:
Post a Comment