Monday, August 26, 2013

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளான இருப்பிடம், கல்வி, மருத்துவம் கிடைக்க 58 ஆயிரம் கோடி ரூபாய் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்!

Monday, August 26, 2013
தூத்துக்குடி::2014 ம் ஆண்டில் தி.மு.க., இல்லாத மத்திய அரசினை காங். உருவாக்கும், அதில் ராகுலை பிரதமராக்வோம்,'' என மத்திய தொழில் மற்றும் வர்த்தக இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பேசினார். தூத்துக்குடியில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நூற்றாண்டு விழா நடந்தது.
 
இதில் நூற்றாண்டு சிறப்பு தபால் உறையை, தபால்துறை தென்மண்டல தலைவர் ஜே.சாருகேசி வெளியிட, மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெற்றுக்கொண்டார். நூற்றாண்டு மலரை அமைச்சர் வெளியிட பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார். சுதர்சன நாச்சியப்பன் பேசியதாவது:
 
உலகில் எங்குமில்லாத அளவு 78 கோடி மக்களுக்கு உணவு உத்தரவாதம் அளிக்க கூடிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவர் கொண்டு வந்த நல்ல திட்டங்களுக்கு, சபாநாயகர் செல்லப்பாண்டியன் உறுதுணையாக சட்டசபையில் இருந்துள்ளார். அவர்கள் காலத்தில் தமிழகம் ஒரே சீரான வளர்ச்சி பெறும் அளவிற்கு திட்டமிட்டுள்ளனர்.
 
இலங்கைக்கு இந்திய பிரதமர் செல்லக் கூடாது என்கின்றனர். இலங்கையில் இருப்பவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான். 40 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இலங்கையை சோழர்கள், பாண்டியர்கள் ஆட்சி செய்துள்ளனர். சிவகங்கை பகுதியை சேர்ந்தவர்கள் இருவர் அமைச்சராக உள்ளனர். இன்று அங்கு அமைதியாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
 
தமிழர்களுக்கு ராஜீவ் 37 வகையான அதிகாரங்களை பெற்று தந்தார். அதனை அனுபவிக்கவே தற்போது தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளான இருப்பிடம், கல்வி, மருத்துவம் கிடைக்க 58 ஆயிரம் கோடி ரூபாய் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இலங்கையை பாதுகாத்து, பராமரிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. அங்கு பிரதமர் செல்லக்கூடாது என்பது எந்த வகையில் நியாயம். 2014 ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., அல்லாத காங். அரசு மத்தியில் அமையும். ராகுல் பிரதமாவார். அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என பேசினார்.

No comments:

Post a Comment