Monday, August 26, 2013
இலங்கை::தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொய் களையும் கட்டுக்கதைகளையும் கூறியே பிரசாரத்தில் ஈடுபடுகிறது. ஏனைய மாகாணங்களில் ஆட்சியமைப் பதுபோல் வடமாகாணத்திலும் நாமே ஆட்சியமைப்போம். இவ்வாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தல் அமைதியான முறையிலும் நீதியான முறையிலும் நடைபெறவேண்டு
மென நாம் எதிர்பார்க்கின்றோம். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏனைய தேர்தல்களைப்போல் இந்தத் தேர்தலிலும் பொய்களையும் கட்டுக்கதைகளையும் பிரசாரம் செய்து வருகின்றது.
கூட்டமைப்பு எந்தக் காலத் திலாவது அபிவிருத்தி வேண்டுமென்றோ முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கவேண்டுமென்றோ கூறியதில்லை. வெறுமனே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தேவையென்று கூறி அதனை பெற்றுக்கொள்வோம் என்று கூறுகின்றது.
நான் மாகாண சபை தொடர்பில் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரனிலும் பார்க்க நான் அதிகப்படியாக தெரிந்து வைத்துள்ளேன். இலங்கையில் மற்ற மாகாணங்களைவிட மேல் மாகாண சபையில் 27.5 வீதமான மக்கள் அதிகமாக உள்ளனர். இச் சபையில் நான் முதலமைச்சராக சேவையாற்றியுள்ளேன். இத்தகைய நிலையில் காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எவ்விதமான பிரச்சினைகளும் வந்ததில்லை.
மத்திய அரசின் கீழ் உள்ள பொலிஸ் சேவையே போதுமானது. மாகாணங்கள் ரீதியான பொலிஸ் அதிகாரம் தேவையில்லை. இந்தியா, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுக்கே இது பொருந்தும். இலங்கையில் 30 தொடக்கம் 50 கிலோ மீற்றர் தூர எல்லையிலேயே மாகாணங்கள் உள்ளன. எனவே இங்கு மாகாண பொலிஸ் அதிகாரம் தேவையில்லை.

No comments:
Post a Comment