Monday, August 26, 2013

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி சந்தேகநபர்களிடம் இருந்து அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 12 கைப்பற்றப்பட்டன!

Monday, August 26, 2013
இலங்கை::யாழ்ப்பாண சிறைச்சாலையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள  புலி சந்தேக நபர்களிடம் இருந்து அதி நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய 12 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச மட்டத்தில் உள்ள புலிகளின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் பேசுவதற்காக இந்த தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக  சிறைச்சாலை பேச்சாளர் கூறியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்ததுடன் அவருடன் இந்த தொலைபேசிகளை பயன்படுத்தி  தொடர்பு கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. 
 
நவநீதம்பிள்ளை வெலிகடை மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள புலிகளின் சந்தேக நபர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதாக நம்பபடுகிறது. 

No comments:

Post a Comment