Monday, August 26, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பெலாரஸ் ஜனாதிபதி அலேக்ஸ்சாண்டர் லுக்கசென்கோவையும் பிரதமர் மியஸ்னி கொவிச்சியையும் சந்திக்கவுள்ளார்!

Monday, August 26, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பெலாரஸ் ஜனாதிபதி அலேக்ஸ்சாண்டர் லுக்கசென்கோவையும் பிரதமர் மியஸ்னி கொவிச்சியையும் சந்திக்கவுள்ளார்

இந்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்று நாள்  பயணத்தை மேற்கொண்டு நேற்று பெலாரஸ்ஸை சென்றடைந்தார்
 
பெலாரசில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் இலங்கை வர்த்தக குழுவொன்றும் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளது.
 
இந்த மாநாட்டில் ஜனாதிபதியும், பெலாரஸ் பிரதமரும் உரைநிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
சுற்றுலாத்துறை ஒன்றிய மாநாட்டிலும் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, மின்ஸ்க் நகரிலுள்ள வாகன உற்பத்தி நிலையமொன்றையும் பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும், சர்வதேச ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment