Wednesday, July 17, 2013

அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பாடுகள் தொடர்பாக இந்தியாவுக்கு இலங்கை விளக்கம்!

Wednesday, July 17, 2013
இலங்கை::அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பாடுகள் தொடர்பாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும் தெரிவுக்குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.ஆர். சின்ஹாவுக்கு நேற்று முன்தினம் தெளிவுபடுத்தினார்.

உயர்ஸ்தானிகர் வை.ஆர். சின்ஹா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அவரது அமைச்சில் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சமயமே இத்தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறினார். இச்சந்திப்பின் போது உயர் ஸ்தானிகர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.

இவ்வேளையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்திற்கான திருத்தங்களை முன்வைப்பதற்கே இத்தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.  எனினும் இத்தெரிவுக்குழு அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்திற்கான திருத்தம் தொடர்பாகவும் தேசிய நல்லிணக்கம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி முழுமையான தேசிய ஒருங்கி ணைப்பை எய்துவதற்கான சிறந்த இடமாகவும் வாய்ப்பாகவும் விளங்கு கின்றது. இத்தெரிவுக்குழுவில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களையும், யோசனைக ளையும் திறந்த அடிப்படையில் முன்வைப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இத்தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமான முடிவை நோக்கிக் கொண்டு செல்ல அரச தரப்பு உச்ச பங்களிப்பை நல்கி வருகின்றது. என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பிரதான எதிர்க்கட்சியும் இத்தெரிவுக்குழுவுக்கு இதுவரையும் எதுவித சாதகமான பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், பிரதான எதிர்க்கட்சியும் இத்தெரிவுக்குழுவில் எதிர்காலத்தில் பங்குபற்றுவர் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இத்தெரிவுக்குழுவின் தற்போதைய நிலைமை தொடர்பான சகல விபரங்களை யும் குழுவின் தலைவர் என்ற அடிப்படை யில் ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் உயர் ஸ்தானிகராலய அரசியல் விவகார செயலாளர் ஆர். ரவீந்திரவும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment