Friday, June 7, 2013

Indian High Profile Delegation meets Governor in Jaffna: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே 13ஆவது திருத்தம்: அதில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Friday, June 07, 2013
இலங்கை::இந்திய தூதுக்குழுவினர் நேற்று  யாழ்ப்பாண  வருகையின் போது   வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியைச் சந்தித்து வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போதைய நிலைமை  நடவடிக்கைகள் பற்றி பிரதிநிதிகள் சந்தித்து பேசினார்.
 
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை அரசியலமைப்பில், 13ஆவது திருத்தம் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அதில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் வடமாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசாங்கம் நடத்தியே ஆக வேண்டும் என்றும் அக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களையும் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் சிவில் சமூகத்தினரைச் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்ட இந்திய குழுவினர், அதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அக்குழுவினர், 'இந்திய மீனவர்களால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக' உறுதியளித்தனர்.

இந்த மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் இந்திய எம்.பி.க்கள் குழுவினர் மேலும் அங்கு குறிப்பிட்டனர்.

இதேவேளை, இந்த சந்திப்பின் போது, வடக்கில் இடம்பெறும் காணி விவகாரங்கள், போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குதல், யாழ்ப்பாணம் அதியுயர் பாதுகாப்பு வலயக் காணிகள் சுவீகரிக்கப்படுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இந்திய எம்.பி.க்கள் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலை அடுத்து, மேற்படி குழுவினர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை சந்தித்து, இந்திய அரசாங்கத்தின் உதவியில் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
  
இந்த சந்திப்பின்போது குடியில் சமூகத்தினரால் பல்வேறு கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டன.
 
இலங்கையின் ஆயுதக் கலாச்சாரத்திற்கு இந்திய அரசாங்கமே
வழிவகுத்தது என்ற கருத்தை சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
 
இலங்கை இந்திய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்படுகின்றன.
 
அத்துடன், இந்திய இழுவைப் படகுகள் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தலை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடப்பட்டும் எதுவித ஆரோக்கியமான நடவடிக்கையும்
இதுவரை நடைபெறவில்லை என்றும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
 
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் கருத்து முன்வைக்கப்பட்டது.
 
 3 தசாப்த காலப் போரின் காரணமாக வடமாகாணத்தில் தொழிற்சாலைகள் செயழிழந்துள்ளதாகவும் குறிப்பாக பரந்தன் ரசாயனத் தொழிற்சாலை, காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலைகள் ;என்பன இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இதனால் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
 
யாழ்ப்பாணத்தில் தற்போது இராணுவத்தினர் பொதுமக்களுடன் சமூகமான நல்லுறவை பேணி வருகின்றனர் என்றும் குடியியல் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் அரச பயன்பாட்டிற்காக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் பொது மக்களின் காணிகள் தொடர்பாகவும் இந்திய தூதுக்குழுவிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது..
 
யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று வியாழக்கிழமை காலை நல்லூருக்கு விஜயம் செய்துள்ளனர்.
நேற்று காலை 8.30 மணிக்கு நல்லூர்  கந்தசாமி கோயிலிலுக்கு சென்ற இந்த குழுவினர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  விசேட பூசை வழியாடுகளில் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் மற்றும் யாழ் மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 11.00 மணிக்கு பின்னர்; கொழும்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், கொழும்பில் 4 நாள்கள் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் வே.மகாலிங்கம் தெரிவித்தார்.

நல்லூரில் வழிபாட்டில் ஈடுபட்ட மேற்படி இந்திய குழுவினர் காலை 9 மணிக்கு யாழ். பொது நூலகத்துக்குச் சென்றனர்.

இக்குழுவினரை யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வரவேற்றதுடன், நூலகம் தொடர்பான தகவல்களையும் 1981ஆம் ஆண்டில் அது எரிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
 
Indian High Profile Delegation meets Governor in Jaffna!
 
This is another achievement of Sri Lanka that many foreign delegations including the opposition party members of INDIA also started visiting Sri Lanka in Post-war era of the country.”
A high level delegation of BJP (BharatheeyaJanatha Party) from India paid a special visit to Jaffna on 05th June 2013. During the visit the delegation met Governor of Northern Province GA Chandrasiri at his office in Jaffna.

The delegation represented by Shankar Prasad, Suresh Prabhu, SwapanDasgupta, VivekKatju, Ram Madhav Varanasi and Smt. Monika Arora had a cordial discussion with Governor regarding and the present situation of Northern Province. Governor briefed the delegation about the development activities in Northern Province.

Mayoress of Jaffna Mrs.Y.Patkunarajah, Chief Secretary of Northern Province Mrs.R.Wijaludchumi, Secretary to the Governor L.Ilaangovan and secretaries of provincial ministries were also present at this meeting.


 

No comments:

Post a Comment