Friday, June 07, 2013
இலங்கை::காணி, பொலிஸ் அதிகாரங்களின்றி வட மாகாணத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.
தேசிய சுதந்திர முன்னணியினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அநுராதபுரத்தில் நேற்று ஆரம்பமான இந்த கையெழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கை கஹட்டகஸ்திகிலிய ஊடாக ஹபரண பகுதியைச் சென்றடைந்தது.
பொலிஸ் காணி அதிகாரம் அற்ற மாகாணசபையாக சட்டம் திருத்தப்பட்ட பின் வட மகாணசபைத் தேர்தலை நடாத்துதல் வேண்டும்.
மேற்படி விடயமாக களனி பட்டிவில விகாரையில் வைத்து தேசிய சுதந்திர முன்ணனித் தலைவர் அமைச்சர் விமல்வீரவன்ச மக்கள் கையொழுத்து வேட்டையை ஆரம்பித்து வைப்பதனை படத்தில் காணலாம்..
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்துசெய்யாமல் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அதனை தடுப்பதற்கு எதிர் நடவடிக்கை: தேசிய பிக்குகள் சம்மேளம் எச்சரிக்கை!
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்துசெய்யாமல் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பிக்குகள் சம்மேளம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சம்மேளனத்தின் செயலாளர் தொம்பகொட சாராநந்த தேர்தல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இரண்ட சரத்துக்களை அகற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தாம் பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வடக்கு மாகாண சபை தேர்தல், காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்த பின்னரே நடத்தப்படவேண்டும் என்றும் அந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
'காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுடன் வடக்கில் தேர்தல் வேண்டாம்;' என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர முன்னணி ஆரம்பித்த கையழுத்து பெறல் நடவடிக்கைகள் நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
நேற்றையதினம் பொதுமக்களிடம் கையழுத்து பெறும் நடவடிக்கை கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அனுர பர்னான்டோ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் லக்ஸ்மன் விஜேசிறி ஆகியோரும் கையெழுத்திட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிலிமத்தலாவை, கடுகண்ணாவ, மாவனெல்லை, கேகாலை, கொட்டியாகும்புர மற்றும் கரவனெல்ல நகரங்களில் இன்றையதினம் பொது கையெழுத்து பெறல் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment