Thursday, June 20, 2013
மாஸ்கோ::உலகில், 90 சதவீத அணு ஆயுதங்கள், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் உள்ளன.
அமெரிக்க அணு ஆயுத விஞ்ஞானிகளின் சார்பில் வெளியாகும் பத்திரிகையில், இது குறித்து
கூறியிருப்பதாவது:-
உலகில் மொத்தம் 17,300 அணு ஆயுதங்கள் உள்ளன. அதிகபட்சமாக
ரஷ்யாவிடம் 8,500 அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 7,700 ஆயுதங்களும், பிரான்சிடம்
300 ஆயுதங்களும், சீனாவிடம் 250 ஆயுதங்களும், பிரிட்டனிடம் 225 ஆயுதங்களும் உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை,
மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க, உரிய நாடுகள் முன் வர வேண்டும்,'' என, அமெரிக்க
அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.




No comments:
Post a Comment