Thursday, June 20, 2013
சென்னை::குன்னூரில் ராணுவப் பயிற்சி பெறும், இரண்டு இலங்கை ராணுவ
அதிகாரிகள், விரைவில் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்,'' என, மத்திய அமைச்சர்
நாராயணசாமி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது:-
குன்னூரில் ராணுவப் பயிற்சி
பெறும் இரண்டு இலங்கை அதிகாரிகளை, திருப்பி அனுப்புமாறு, ராணுவ அமைச்சர் மற்றும்
செயலரிடம் கூறியுள்ளோம். விரைவில், இரு அதிகாரிகளும் திருப்பி அனுப்பப்படுவர்.
பா.ஜ., கட்சி சார்பில், பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை நிறுத்த அதிக
வாய்ப்புள்ளது. அதேபோல், காங்கிரஸ் சார்பில், பிரதமர் வேட்பாளராக, ராகுலை நிறுத்த
அதிக வாய்ப்புள்ளது. இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக
மீனவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; விரைவில் அவர்கள்
மீட்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்..
காங்கிரஸில் பாருங்கள், பிரதமர் பதவிக்கு பெருந்தன்மையுடன் ராகுல் காந்தியை அனைவரும் பரிந்துரைக்கிறோம். ஆனால் பா.ஜ.க. வில் பெரும் அடிதடியே நடக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பின் போது 2014 ம் ஆண்டு ராகுல் பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். 2004 ம் ஆண்டு பிரதமர் பதவியை மன்மோகன் சிங்குக்கு சோனியா கொடுத்தார். 2014 ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பிரதமர் பதவியை ராகுல் காந்தியிடம் மன்மோகன் சிங் ஒப்படைக்க உள்ளார்.
இந்த பெருந்தன்மை காங்கிரஸ் கட்சியில் மட்டுமே உள்ளது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் பதவிக்கு குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. மோடியை ஏற்க அத்வானி மறுக்கிறார். அத்வானியை ஏற்க மோடி மறுக்கிறார். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகிறார்கள். இவர்களால் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்றார் நாராயணசாமி.

No comments:
Post a Comment