Thursday, June 20, 2013

ஜப்பானிய வர்த்தக குழுவினர் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!

Thursday, June 20, 2013
சென்னை::சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று ஜப்பானிய வர்த்தக குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு கழகத்தின் தலைவர் அகிஹிகோ டனாகா தலைமையிலான குழுவினர் நேற்று தலைமைச்செயலகத்துக்கு வந்தனர் அவர்கள் முதல்வர் ஜெயலலிதா நேற்று சந்தித்தனர்.
 
அப்போது அகிஹிகோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நந்தம்.விஸ்வநாதன், கே.முனுசாமி, வைத்தியலிங்கம், தலைமைச்செயலாளர் ஷீலாபாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
 
ஜப்பானிய கூட்டுறவு கழகத்தின் தலைவர் அகிஹிகோ டானாகா வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா அவரிடம் தமிழக மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நீண்ட கால வர்த்தக உறவுகள் குறித்து பேசினர்.
ஜப்பானிய கூட்டுறவு கழகம் தமிழ்நாட்டுக்கு கடந்த 30-ஆண்டு காலமாக பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதிஉதவி செய்யவதாகவும் இதன் மூலம் தமிழகம் வளர்ச்சியடைவதற்கு உறுதிணையாக இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறிப்பிட்டார்.
 
ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு கழகம் நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதிஉதவி செய்கிறது. குறிப்பாக கட்டுமான துறையில் அவ்வமைப்பு நிதியுதவி செய்கிறது. தமிழ்நாடு வனவளர்ப்பு திட்டம், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டம், தமிழ்நாடு பல்உயிரி பாதுகாப்புத் திட்டம், பசுமைஇயக்கம் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இந்த கூட்டுறவு கழகம் நிதியுதவி செய்கிறது. இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா தமிழக வளர்ச்சிக்கு ஜப்பானிய தொழில்த்துறை மற்றும் முதலீட்டவர்கள் ஆதரவு அளிப்பதற்கு தமிழகம் பெருமைப்படுவதாக கூறிப்பிட்டார்.
 
மாநில ஏற்கனவே 400-ஜப்பானிய கம்பெனிகள் முதலீடு செய்திருப்பதாகவும், தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பல்வேறு ஜப்பானிய முதலீடுட்டாளர்கள் முதலீடு செய்யவதற்கும் கூட்டுறவாக தொழில்களில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அதற்கு தாம் நன்றி தெரிவித்ததோடு தமிழகத்தில் அவர்களின் முதலீடும்  ஒத்துழைப்பும் வளர தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு முனைப்போடு இருப்பதாகவும் முதல்வர்  தெரிவித்தார்.
 
இதற்கு அகிஹிகோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளதால் தமிழக அரசு தொழில் வளர்ச்சியில் முன்னோக்கி செல்வதை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment