Thursday, June 20, 2013
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட சுமார் 88 பேர் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் மட்டக்களப்பின் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவினர் பயணித்த படகு, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தக் குழுவினரை அடையாளங் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
86 தமிழர்கள், ஒரு சிங்களம் மற்றும் 56 ஆண்கள், 18 பெண்கள், 14 குழந்தைகள் உள்ளிட்ட ஒரு முஸ்லீம், அவர்கள் மேலும் விசாரணை செய்ய துறைமுக போலீஸ் திருகோணமலைக்கு கொண்டு சென்றனர்.




No comments:
Post a Comment