Thursday, June 13, 2013

காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் ; கடத்திச்சென்ற நால்வரில் மூவர் கைது!

Thursday, June 13, 2013
இலங்கை::செவ­ன­கல சூரி­வெவ பிர­தே­சத்தில் 17 வயது  யுவ­தியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய நால்­வரில் மூன்று பேரை செவ­ன­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்த யுவதி தமது காதல­னு­டனும்  அவ­ரது நண்பர் ஒரு­வ­ரு­டனும் வாவிக் கரையில் அமர்ந்­தி­ருந்­த­போது அங்கு வந்த சந்­தே­க­ ந­பர்கள் இளை­ஞர்கள் இரு­வ­ரையும் அச்­சு­றுத்தி  துரத்­தி­விட்டு யுவ­தியை பாழ­டைந்த வீடொன்­றுக்கு கடத்திச்  சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர். பின்னர் யுவ­தியை  வாக­ன­மொன்றில் வீட்­டுக்கு  அனுப்பி வைத்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்கள் 29, 25 மற்றும் 21 வய­து­டை­ய­வர்கள் என்றும், இவர்­களில் இருவர் திரு­ம­ண­மா­ன­வர்கள் என்றும் செவ­ன­கல பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
நான்காவது  சந்தேகநபரைத் தேடி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment