Thursday, June 13, 2013
இலங்கை::திருகோணமலை கோணேசபுரியில் வசிக்கும் புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர் ஒருவரின் தாயார் பி.பாக்கியம் ஞாயிற்றுக்கிழமை 09.06.2013 திருகோணமலை பொது வைத்தியசாலையில் இயற்கை எய்தினார். இவரின் இறுதிச்சடங்கினை மேற்கொள்ளவும் உடலத்தை வீட்டுக்கு எடுததுச் செல்லவும் வசதி அற்ற நிலையில் உள்ள போது இராணுவம் உதவ முன்வந்தது. உடலத்தை பொது வைத்தியசாலையில் இருந்து அன்னாரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவினர்.
221வது படைப்பிரிவு பிரஹேடியர் எஸ்.பி.செனவிரத்னவின் ஆலோசனையில் கஜபா படைப்பரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் ஆர்.எம்.எச் ஜயதிஸ்ஸ இதற்கான உதவி ஒத்தாசைகளை வழங்கினார். உடலத்திற்கான பெட்டி, மற்றும் உணவுகளும் இராணுவத்தால் வழங்கி வைக்கப்பட்டது. இரணுவ வாகனத்தில் உடல் கோணேசபுரியில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

No comments:
Post a Comment