Thursday, June 13, 2013

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 5 அதிமுக வேட்பாளர்களும் வேட்பு மனுத்தாக்கல்!

Thursday, June 13, 2013
சென்னை::நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்காக 5 அதிமுக வேட்பாளர்களும், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
காலியாகும் 6 இடங்களுக்கான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்க தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 10ம் தேதி துவங்கியது. 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒரு எம்பி வெற்றிபெற 34 எம்எல்ஏக்கள் ஓட்டு போட வேண்டும். அதன் படி, 151 எம்எல்ஏக்களை கொண்டுள்ள அதிமுக வுக்கு 4 எம்பி, கூட்டணி கட்சி ஆதரவுடன் மேலும் ஒரு எம்பி என 5 எம்பி கிடைக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு, அதிமுக சார்பில் 5 வேட்பாளர்களை ஜெயலலிதா 10ம் தேதி அறிவித்தார். பின்னர் சரவணபெருமாளுக்கு பதிலாக தங்கமுத்து மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மைத்ரேயன் (அதிமுக மருத்துவ அணி தலைவர் மற்றும் நாடாளுமன்ற குழு துணை தலைவர்), கே.ஆர்.அர்ஜூனன் (நீலகிரி மாவட்ட செயலாளர்), டி.ரத்தின வேல் (திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர்), ஆர்.லட்சுமணன் (விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்), கு.தங்கமுத்து (அதிமுக விவசாய பிரிவு செயலாளர்) ஆகியோர், நேற்று மதியம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஜமாலுதீனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்து, ஸீ10 ஆயிரம் டெபாசிட் தொகையை செலுத்தினர். ஒவ்வொரு வேட்பாளர் மனுவையும் 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து இருந்தனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதையொட்டி, தமிழகத்தில் நாடாளுமன்ற மேலவை தேர்தல் களம் தீவிரம் அடைந்துள்ளது. இன்னும் ஒரு எம்பி பதவிக்கு திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக 6 வேட்பாளர்களும் தேர்வு செய்யப்படுவார்களா அல்லது வேறு கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து வாக்குப்பதிவு ஏற்படும் நிலை வருமா என்பதற்கு ஓரிரு நாளில் விடை கிடைக்கும்.

No comments:

Post a Comment